தமிழ்நாடு

மிக்‌சியை விற்று மது அருந்திய கணவனை கட்டையால் தாக்கி கொன்ற மனைவி - பிரேத பரிசோதனையில் அம்பலமான கொலை

திருப்பூர் அருகே மிக்‌சியை விற்று மது அருந்திய கணவரை மனைவி கட்டையால் தாக்கி கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

தந்தி டிவி

திருப்பூர் மாவட்டம் மங்கலத்தை அடுத்த மீனாட்சி நகரை சேர்ந்தவர் வெங்கடேசன். தையல் தொழிலாளியான இவர் மது போதைக்கு அடிமையானதாக தெரிகிறது. இதனால் அவ்வப்போது அவருடைய மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், கடந்த 17 ஆம் தேதி வெங்கடேசன் இருசக்கரவாகனத்தில் இருந்து தவறி விழுந்து காயமடைந்த‌தாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் உயிரிழக்கவே அவரது சடலம் அவசர அவசரமாக எரியூட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் வெங்கடேசன் உடலை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரது தலையில் கட்டையால் தாக்கியதற்கான காயங்கள் இருப்பதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து வெங்கடேசன் மனைவி உமாதேவியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது வீட்டில் இருந்த மிக்சியை விற்று மது அருந்தியதால் கணவரை கட்டையால் தாக்கியதாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து விபத்து வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த போலீசார் உமாதேவியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி