ஒசூரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சாம்பார் வெங்காய தாள்களுக்கு, உயர்ரக உணவு விடுதிகளில் வரவேற்பு அதிகரித்துள்ளது. இதனால் வெங்காய தாள்களை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். ஒரு ஏக்கர் வெங்காய தாள் விற்பனை செய்தால், செலவு போக 50ஆயிரம் வரை லாபம் கிடைப்பதாக அவர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.