சென்னை கிண்டியை அடுத்த மடுவங்கரையில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட மாநகராட்சி ஊழியர் கர்ணன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், ராயபுரம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, மாநகராட்சி ஊழியர் கர்ணன் மீது நம்பிக்கை மோசடி உள்பட 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.