திமுக பிரமுகர் கழுத்தறுத்து கொலை - விசாரணை சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வெள்ளையூரில் திமுக நிர்வாகி மாணிக்கம் கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்த அவரை, மர்ம நபர்கள் கொலை செய்ததாக கூறப்படுகிறது. காலையில் அவரது உடலை ரத்த வெள்ளத்தில் கண்ட குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த வீரகனூர் போலீசார் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும், கொலைக்கான காரணம் மற்றும் குற்றவாளிகளை கண்டறிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.