திண்டுக்கல் மாவட்டம் பழனி மலை கோயிலில் ஈரோடு பக்தர்கள் காவடி எடுத்து செல்ல கோயில் நிர்வாகம் சிறப்பு வழி ஏற்பாடு செய்து இருந்தது. அதில் எடப்பாடியை சேர்ந்த பக்தர்கள் முண்டியடித்துக்கொண்டு நுழைந்ததால் கோயில் பாதுகாவலர்கள் தடுத்து தாக்கியதாக கூறப்படுகிறது. அப்போது காயம் அடைந்த எடப்பாடியை சேர்ந்த சந்திரன் மற்றும் அவரது மகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து காயம் அடந்தவர்களுடன் வந்த 500க்கும் மேற்பட்டோர்
கோயில் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பக்தர்கள் மீது தாக்குதல் நடத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கோயில் உதவி ஆணையர் தெரிவித்துள்ள போதிலும் பக்தர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் போலீசார் குவிக்கப்பட்டனர்.