தமிழ்நாடு

Chidambaram | பட்டப்பகலில் வீடு புகுந்து பட்டாக்கத்தியால் சரமாரி வெட்டு - கஞ்சா போதையில் கொடூரம்

பட்டப்பகலில் வீடு புகுந்து பட்டாக்கத்தியால் சரமாரி வெட்டு - கஞ்சா போதையில் கொடூரம்

thanthitv

பட்டப்பகலில் வீடு புகுந்து பட்டாக்கத்தியால் சரமாரி வெட்டு - கஞ்சா போதையில் கொடூரம்

சிதம்பரத்தில் தொழிலாளியை வீடு புகுந்து வெட்டியவர் கைது சிதம்பரத்தில் கூலித் தொழிலாளியை வீடு புகுந்து வெட்டிய வழக்கில், கஞ்சா ஆசாமி ஒருவரை போலீசார் சினிமா பட பாணியில் துரத்திப் பிடித்துள்ளனர். கோவிந்தராஜன் என்ற கூலித் தொழிலாளியை, முன்விரோதம் காரணமாகக் ராகுல் என்பவன் இன்று அதிகாலை வீடு புகுந்து பட்டாக்கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த கோவிந்தராஜன் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தப்பியோடியவரை பிடிக்கச் சிதம்பரம் நகரப் போலீசார் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வந்தனர். அப்போது, போலீசாரைக் கண்டதும் தனது இருசக்கர வாகனத்தால் காவல் துறையினரின் வாகனத்தை இடித்துத் தள்ளியபடி ராகுல் தப்ப முயன்றுள்ளார். இருப்பினும், விடாமல் துரத்திய தனிப்படையினர் அவனை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். கைதான ராகுல் மீது ஏற்கனவே பல்வேறு வழிப்பறிக் வழக்குகள் உள்ள நிலையில், அவனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Iran US War |போர்நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்தார் டிரம்ப் -முன்பு நடந்ததை விட முழு போராக மாறுகிறது

BREAKING | EPFO | PF சந்தாதாரர்களுக்கு குட் நியூஸ் | வெளியான அறிவிப்பு

Onam | Keralam | ஓணம் பண்டிகை - வெளியான முக்கிய அறிவிப்பு

Nalam AI | இனி க்யூல நிற்க வேண்டாம்.. | உங்க மாவட்டம் லிஸ்ட்ல இருக்கா.. | Detailஆக சொன்ன அமைச்சர்

Minister Arunraj | TVK | "மாநில பட்டியலுக்கு வந்தால் மட்டுமே தீர்வு கிடைக்கும்"