கொடைக்கானல் பகுதிகளில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மரங்களை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். கொடைக்கானலில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். மரங்கள் விழுந்து கிடப்பது குறித்து தகவல் கிடைத்தால், உடனடியாக அவை அகற்றப்படும் என்றும் தெரிவித்தார்.