சென்னை - செனாய் நகரில் உள்ள அம்மா அரங்கத்தில் தொழிலாளர் துறை தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புச்சாரா தொழிலாளர்கள் நலவாரியம் சார்பாக பதிவுபெற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது . தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.