தமிழ்நாடு

ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட வெள்ளிக்காசுகள் : காரில் இருந்து 5 கிலோ வெள்ளிக்காசுகள் பறிமுதல்

திண்டிவனத்தில் ஆவணமின்றி காரில் எடுத்து செல்லப்பட்ட 5 கிலோ வெள்ளிக் காசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி

திண்டிவனத்தில் ஆவணமின்றி காரில் எடுத்து செல்லப்பட்ட 5 கிலோ வெள்ளிக் காசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலையொட்டி, தேர்தல் பறக்கும் படைகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திண்டிவனம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கல்லூரி சந்திப்பில், தேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனையில், காரில் இருந்து இந்த 5 கிலோ வெள்ளிக்காசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து அவை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன. இதேபோல், தனியார் ஆம்னி பேருந்தில் ஒருவரிடம், ஆவணம் இன்றி ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி