சென்னையில் பஸ்டே கொண்டாடியது பேருந்தின் மேற்கூரையில் இருந்து மாணவர்கள் விழுந்து, பலத்த காயமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, பஸ்டே கொண்டாடக்கூடாது என்று காவல்துறையினரும் நீதிமன்றமும் எச்சரிக்கையும் விடுத்திருந்தது. இந்நிலையில், கோவையின் முக்கிய சாலையில், மாணவர்கள் பஸ்டேவை கொண்டாடினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.