சென்னை அடுத்த மாதவரத்தில், புகார் குறித்து விசாரிக்க போலீசார் அழைப்பு விடுத்த நிலையில், ரயில் முன் பாய்ந்து ரமேஷ் என்ற இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைகக்கு காரணமான நபரை கைது செய்ய வலியுறுத்தி, மாதவரம் காவல் நிலையத்தை ரமேஷின் உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.