திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள கீழ்முதலம்பேடு கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தின் மேற்கூரை பூச்சு திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த மையத்திற்கு தினமும் 20 குழந்தைகள் வந்து செல்லும் நிலையில், இன்று காலை பணியாளர் மையத்தைத் திறந்தபோது மேற்கூரை பூச்சு பெயர்ந்து தரையில் விழுந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். குழந்தைகள் வருவதற்கு முன்பே இந்தச் சம்பவம் நடந்ததாலும், இதைப் பார்த்த பெற்றோர்கள் உடனடியாகத் தங்களது குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றதாலும் பெரும் உயிர்ச்சேதம் நல்வாய்ப்பாகத் தவிர்க்கப்பட்டது.