Kanniyakumari Protest | சிறைக்கைதி சபரிவர்மன் மரண விவகாரம் | சாலையில் இறங்கிய உறவினர்கள்

சிறைக்கைதி சபரிவர்மன் மரணம் - உறவினர்கள் மறியல் போராட்டம் சிறைக்கைதி சபரிவர்மன் மரணத்தை கண்டித்து நாகர்கோவில் புறவழிச்சாலையில் அவரது உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். சபரிவர்மனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி கன்னியாகுமரி நாகர்கோயில் புறவழிச்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com