அக் ஷய திருதியை ஒட்டி, திருச்சியில், மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடந்தது. மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், இதை தொடங்கி வைத்தார். அக் ஷய திருதியை நாளில், வீட்டின் செல்வம் பெருக அனைவரும், நகைகடைகளில் குவித்து வரும் நிலையில், தமிழகத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க, மழை வேண்டி மரம் நடப்பட்ட நிகழ்வு அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. தன்னார்வலர்கள் பலர் மரம் நடும் நிகழ்வில் பங்கேற்றனர்.