விளையாட்டு

டி.என்.பி.எல் 2019 : இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற டி.என்.பி.எல் இறுதிப்போட்டியில், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்.

தந்தி டிவி
டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் கடந்த ஒரு மாதமாக நடந்து வந்தது, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கிரிக்கெட் மைதானங்களில் இந்த போட்டிகள் நடத்தப்பட்டன. மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டிகளில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்தது , முதல் போட்டியில் தோல்வியை தழுவிய போதிலும் அடுத்தடுத்த போட்டிகளில் தொடர் வெற்றிகளை பதிவு செய்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ். இந்நிலையில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணியுடன் மோதிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது , ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்களை சேர்த்தது அந்த அணி, பின்னர் களமிறங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி இறுதி வரை போராடி 114 ரன்களுக்கு 9 விக்கெட்களை இழந்து தோல்வியை தழுவியது , கடந்த 2017 ஆம் ஆண்டு இறுதி போட்டியில் கோப்பையை வென்ற நிலையில் தற்போது 2019 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி கோப்பையை கைப்பற்றியது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி