நத்தத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட் செய்த 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ஆடிய முரளி விஜய் 101 ரன்களும், கணேஷ் 56 ரன்களும் விளாசினர். இதனையடுத்து 178 ரன்கள் இலக்கை நோக்கில் விளையாடிய தூத்துக்குடி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.