விளையாட்டு

டி.என்.பி.எல் 3வது சீசன் கிரிக்கெட் தொடர் : நெல்லையில் நாளை கோலாகல துவக்கம்

தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி, நெல்லையில் நாளை, புதன் கிழமை துவங்குகிறது. துவக்க ஆட்டத்தில், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை, ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி எதிர்கொள்கிறது.

தந்தி டிவி

"நம்ம ஊரு கிரிக்கெட்" என அழைக்கப்படும் தமிழ்நாடு பிரிமீயர் லீக் 3 - வது ஆண்டு கிரிக்கெட் போட்டி, நெல்லை, திண்டுக்கல் மற்றும் சென்னை என

3 நகரங்களில் நடைபெறுகிறது.

நெல்லையில், நாளை துவங்கும் முதல் நாள் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் - ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.

தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டியில் முதன்முறையாக வெளி மாநில வீரர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, தனது முதல் ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸை, சென்னையில் வருகிற 14- ம் தேதி சந்திக்கிறது.

8 அணிகள் மோதும் இந்த போட்டியில், ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் தலா 1 போட்டியில் மோத வேண்டும். லீக் முடிவில், புள்ளிகள் அடிப்படையில், முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள், "பிளே ஆப் " சுற்றுக்கு தகுதி பெறும்.

லீக் போட்டிகள், ஆகஸ்ட் 5- ம் தேதி முடிவடைந்ததும், "பிளே ஆப்" சுற்று, ஆகஸ்ட் 7 - ம் தேதி துவங்கும். தகுதி சுற்று ஆட்டம் நெல்லையிலும், வெளியேற்றுதல் மற்றும் 2 - வது தகுதி சுற்று ஆட்டங்கள் திண்டுக்கல்லிலும் நடைபெறும்.

சாம்பியன் பட்டத்தை வெல்வது யார்? என்பதை முடிவு செய்யும் இறுதிப்போட்டி, ஆகஸ்ட் 12 - ம் தேதி சென்னை- சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் விளையாட்டரங்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி