பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், தனது நீண்ட நாள் காதலரான பேட்மிண்டன் வீரர் கஷ்யாப்பை திருமணம் செய்ய உள்ளார். ஐதராபாத்தை சேர்ந்த இந்த ஜோடி பேட்மிண்டன் பயிற்சியின் போது காதலித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இரு வீட்டாரும் காதலுக்கு பச்சை கொடி காட்டியதை அடுத்து வரும் டிசம்பர் மாதம் தனது காதலர் கஷ்யாப்பை, சாய்னா நேவால் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சாய்னாவின் திருமண செய்தியை அறிந்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.