பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு நான்காம் இடம் பிடித்தார். மகளிர் 49 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில் பங்கேற்ற மீராபாய் சானு, மொத்தமாக199 கிலோ பளுவை தூக்கினார். இதன்மூலம், நான்காம் இடம் பிடித்த மீராபாய் சானு, வெண்கலப் பதக்கத்தை தவறவிட்டார். இன்னும் 2 கிலோ அதிகமாக மீராபாய் சானு, பளு தூக்கி இருந்தால் வெண்கல பதக்கம் கிடைத்திருக்கும். கடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற மீராபாய் சானு, தற்போது பதக்கம் வெல்லாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.