விளையாட்டு

ரஞ்சி - மும்பையை சொந்த மண்ணில் வீழ்த்தி அதிர்ச்சி அளித்த காஷ்மீர்

தந்தி டிவி

ரஞ்சி கோப்பை டெஸ்ட் தொடரில் நடப்பு சாம்பியன் மும்பையை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி ஜம்மு காஷ்மீர் அதிர்ச்சி அளித்தது. குரூப்-ஏ பிரிவில் நடைபெற்ற போட்டியில் மும்பை முதல் இன்னிங்சில் 120 ரன்களும் ஜம்மு காஷ்மீர் 206 ரன்களும் எடுத்தன. 2வது இன்னிங்சில் மும்பை 290 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. தொடர்ந்து 205 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ஜம்மு காஷ்மீர், 5 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரோகித் சர்மா, ஷ்ரேயாஸ் ஐயர், ரஹானே, ஜெய்ஸ்வால், துபே, ஷர்துல் தாக்கூர் என பல நட்சத்திர வீரர்கள் இருந்தும் மும்பை தோல்வி அடைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்