அமெரிக்காவில், மியாமி ஓபன் டென்னிஸ் தொடர், வருகிற 22-ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில், உடல் தகுதியை கருத்தில் கொண்டு, இந்த தொடரில், பெடரர் கலந்துகொள்ள மாட்டார் என்று அவரது செய்தித் தொடர்பாளர் காட்ஷிக் தெரிவித்து உள்ளார். 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள பெடரர், கடந்த ஆண்டு நடந்த ஆஸ்திரேலிய ஓபனில், கடைசியாக கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.