ஒடிசா மாநிலம், கட்டாக்கில் உள்ள ஜவஹர்லால் நேரு உள் அரங்கில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியை, பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். பள்ளிகளுக்கான கேலோ இந்தியா போட்டியில் 80 சாதனைகளில் 56 சாதனைகள் மாணவிகளால் நிகழ்த்தப்பட்டு உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்த போட்டி விளையாட்டு துறையின் வரலாற்றில் முக்கியமானதாக அமையப்போவது மட்டுமல்ல, விளையாட்டு போட்டிகளின் எதிர்காலத்திற்கு ஒரு முக்கிய மைல் கல்லாக திகழப்போவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.