தேனி மாவட்டத்தில் குடிசை பகுதியில் வசிக்கும் 4 ஆயிரம் பேருக்கு குடியிருப்புகள் கட்டி தருவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருவதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
தேனியில் சமூக நலத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை சார்பாக தாலிக்கு தங்கம் வழங்குதல் மற்றும் மானிய விலை இரு சக்கர வாகனம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்தார்.