அரசியல்

மத்திய அரசை கண்டித்து செப்.20-ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து வருகிற 20ஆம் தேதி மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக தெரிவித்து உள்ளது.

தந்தி டிவி

மத்திய அரசை கண்டித்து வருகிற 20ஆம் தேதி மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,வேளாண் சட்டங்கள், பெட்ரோல் டீசல் விலை உயர்வு, தனியார்மயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து போராட்டம் நடத்த தேசிய அளவிலான எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது என்றும், இதன்படி, வருகிற 20-ம் தேதி காலை 10 மணியளவில் திமுக நிர்வாகிகள், தங்களின் இல்லம் முன்பாக கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கண்டன போராட்டத்தில், கூட்டணி கட்சியினருடன் இணைந்து திமுகவினர் ஈடுபட வேண்டும் என்றும்,மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து மதச்சார்பற்ற ஜனநாயக இந்திய குடியரசைப் பாதுகாப்போம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி