அரசியல்

ADMK | Saidai Duraisamy | "அதிமுக உருவாக்கம் ஒரு ஜனநாயகப் புரட்சி" | சைதை துரைசாமி பெருமிதம்

"அதிமுக உருவாக்கம் ஒரு ஜனநாயகப் புரட்சி" | சைதை துரைசாமி பெருமிதம்

thanthitv

ADMK | Saidai Duraisamy | "அதிமுக உருவாக்கம் ஒரு ஜனநாயகப் புரட்சி" | சைதை துரைசாமி பெருமிதம்

#ADMK #saidaiduraisamy #MGR #TNpolitics #ThanthiTV

தமிழக அரசியல் வரலாற்றில் அக்டோபர் 17-ஆம் தேதி மக்கள் ஜனநாயகப் புரட்சி நாள் என்று சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்... இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், லஞ்சம், ஊழல் மற்றும் குடும்ப வாரிசு அரசியலுக்கு எதிராகப் பொதுமக்கள், தொண்டர்கள் மற்றும் ரசிகர்களால் உருவாக்கப்பட்ட ஒரே இயக்கம் அதிமுக மட்டும்தான் என அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார். 1972-இல் அப்போதைய திமுக ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டதாக காமராஜர் குற்றம்சாட்டி இருந்த நிலையில், தாய்க்கழகமே முக்கியம், தனிக்கொடி தேவையில்லை என அறிவித்த எம்.ஜி.ஆரின் காரை மறித்து திமுக ஆட்சியின் ஊழல்களை தான் அம்பலப்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், தான் கூறியவை உண்மை என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பிறகு, கட்சிக் கணக்குகளைக் கேட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார் என்று சைதை துரைசாமி தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்... எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டதை, கண்டித்து பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் தீவிரப் போராட்டங்களில் ஈடுபட்டதாகவும், மக்கள் விருப்பத்திற்கு இணங்கவே அக்டோபர் 17-இல் 'அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' உருவானதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதிமுக தொடங்கப்பட்ட முதல் வாரத்திலேயே 11 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்த வரலாற்றுச் சாதனையை நினைவு கூர்ந்துள்ள சைதை துரைசாமி, பிரிந்து நிற்கும் அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைந்து திமுகவை வீழ்த்த இந்நாளில் சபதமேற்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

BREAKING || படையெடுத்த சென்னை மக்கள்... கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரேயே இப்படியா?

Breaking | TN Rains | Rain Alert | ``அரபிக்கடலில் கிளம்பும் அசுரன்..'' | வந்தது அலர்ட்

Breaking | Online Scam | ரூ.15 கோடி FQL மோசடி | ஹைகோர்ட் மதுரை அமர்வு அதிரடி

Breaking | Highcourt | "பலரது திருமண பந்தத்தை அழித்த கொரோனா லாக்டவுன்" | ஹைகோர்ட் பரபரப்பு கருத்து

BREAKING || நாட்டையே திரும்பவைத்த ஜந்தர் மந்தர் போராட்டம் - SIT அமைத்த உச்சநீதிமன்றம்