உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில், மாணவர்களை அடித்து துன்புறுத்திய விடுதி காப்பாளரை கண்டித்து மாணவர்கள் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்குள்ள ராஜ்கியா தொழில்நுட்ப கல்லூரி விடுதியில் மாணவர்கள் விடுதி காப்பாளரால் தாக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துவந்தன. இந்நிலையில் விடுதி காப்பாளர் மாணவர்களை அடிக்கும் காட்சிகளை மாணவர்
ஒருவர் செல்போனில் படமெடுத்து இணையதளங்களில் வெளியிட்ட நிலையில், விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.