இந்தியா

ஏழுமலையான் கோயிலில் தூய்மை பணி - 5 மணி நேரம் தரிசனம் ரத்து

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார்தி ருமஞ்சனத்தையொட்டி, 5 மணி நேரம் தரிசனம் ரத்து செய்யப்பட்டது.

தந்தி டிவி
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் யுகாதி, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி ஆகிய தினங்களுக்கு முன் வரக்கூடிய செவ்வாய்க்கிழமைகளில் கோயிலை சுத்தம் செய்வது வழக்கம். அதன்படி, இன்றைய தினம் ஆழ்வார் திருமஞ்சனமான, கோயிலை சுத்தம் செய்யும் பணி நடந்தது. கோயிலில் உள்ள அனைத்து சன்னதிகளும் தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டு, கஸ்தூரி மஞ்சள், கிச்சலிக்கட்டை, திரிசூணம் உட்பட பல்வேறு மூலிகைகளால் தயார் செய்யப்பட்ட கலவை கோயில் சுவற்றில் தெளிக்கப்பட்டு வருகிறது. இதனால் 5 மணிநேரம் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சிறப்பு பூஜை செய்யப்பட்டு 12 மணிக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

TN Weather Report | வங்கக்கடலில் உண்டான திடீர் மாற்றம்.. தமிழகத்துக்கு முக்கிய செய்தி

Dhoni Court Case | ``தோனி ரூ.10 லட்சம் செலுத்த வேண்டும்’’ - கோர்ட் அதிரடி உத்தரவு

DMDK Premalatha | தொண்டர்களின் விருப்பத்தை ஏற்று அறிவித்தார் பிரேமலதா

Thiruppuvanam Ajith Death | 4 அதிகாரிகளுக்கு.. அஜித் கொலை வழக்கில் அடுத்த பரபரப்பு

Madras Highcourt | ``2026 தேர்தலை காரணம் காட்ட கூடாது'' - ஐகோர்ட் வார்னிங்