#treefallen #schoolstudent மரம் சாய்ந்து விபத்து - நூலிழையில் தப்பிய பள்ளி மாணவி மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் மழையின்போது திடீரென மரம் சாய்ந்து விழுந்த நிலையில், பள்ளி மாணவி நூலிழையில் உயிர்தப்பி உள்ளார். அபினவ் சௌக் பகுதியில் லேசான மழை பெய்து கொண்டிருந்தபோது, சாலையைக் கடந்து சென்ற மாணவியின் அருகே பெரிய மரம் திடீரென விழுந்தது சில வினாடிகளுக்கு முன்பே மாணவி அந்த இடத்தை விட்டு விலகிச் சென்றதால், காயமின்றி உயிர்தப்பினார். அதேபோல், அவ்வழியாக வந்த ஆட்டோவும் மரத்தில் சிக்காமல் தப்பியது இந்தச் சம்பவம் அருகிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தகவலறிந்து விரைந்து வந்த புனே மாநகராட்சி தீயணைப்புத் துறையினர் சாலையில் விழுந்த மரத்தை அகற்றினர்.