சென்னையின் பல்வேறு பகுதிகளில் நான்காவது நாளாக நேற்றிரவு
காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். கிண்டி, சைதாப்பேட்டை, அடையார்,அண்ணாநகர்,மெரினா உள்ளிட்ட பகுதிகளில் துணை ஆணையர்கள் தலைமையில் நடக்கும் வாகன சோதனையை சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆய்வு செய்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மேலும் 15 தினங்கள் இந்த வாகன சோதனை தொடரும் என்றார்.