இந்தியா

ஆந்திரா : பக்தர்கள் சென்ற பேருந்து முழுவதும் தீப்பிடித்து எரிந்து நாசம்

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் அருகே, லாரி மீது மோதிய பேருந்து தீப்பிடித்து எரிந்த நிலையில், 50 பக்தர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

தந்தி டிவி
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் அருகே, லாரி மீது மோதிய பேருந்து தீப்பிடித்து எரிந்த நிலையில், 50 பக்தர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். உத்தரகாண்ட் பக்தர்கள், ராமேஸ்வரம் வந்துவிட்டு, திரும்பிச் சென்ற பேருந்து, ஆந்திர மாநிலம், நெலி வாடா அருகே விபத்தில் சிக்கியது. திடீரென குறுக்கே வந்த பேருந்தில் மோதாமல் தவிர்க்க, வேறொரு சுவர் பக்கம் பேருந்து திருப்பி மோதியுள்ளார். ஆனால், சுவரை உடைத்துக்கொண்ட சென்ற பேருந்து, மறுபக்கம் நின்ற லாரி மீது பக்தர்கள் பேருந்து மோதியது. உடனடியாக பேருந்தில் இருந்த 50 பயணிகளும் இறக்கப்பட்டனர். எனினும், பேருந்து முழுவதும் தீப்பிடித்து எரிந்து நாசமானது.

Gold | Kovai | சிவராத்திரிக்கு கோயிலுக்கு போன நேரத்தில் அடிக்கப்பட்ட 70 சவரன் தங்கம், 20 கிலோ வெள்ளி

Chennai Trains | ஆயிரத்தெட்டு பிரஷரில் காலை பரபரப்பில் வரும் ரயில் பயணிகளை கடுப்பாக்கும் செய்தி

Bank Fire Accident | வங்கியில் பயங்கர தீ விபத்து..ஸ்தம்பித்த முக்கிய பகுதி

#Breaking | Srilanka Arrest | 25 பேரை கைது செய்த இலங்கை

#Breaking || Chennai | சென்னை பேருந்து பயணிகளுக்கு அதிர்ச்சி செய்தி.. சில்லறை முக்கியம்