சினிமா

படங்களின் விளம்பர நிகழ்ச்சிக்கு வராத நடிகர்கள் - அஜீத், நயன்தாரா, திரிஷாவிற்கு சிக்கல்?

திரைப்படங்களின் விளம்பர நிகழ்ச்சிக்கு, படத்தில் நடித்த , நடிகர்கள் வரவில்லை என்றால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

தந்தி டிவி

கோடிக்கணக்கில் பணத்தை முதலீடு செய்து படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் அதனை விளம்பரப்படுத்த இசை வெளியிட்டு விழா பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடத்துகின்றனர்.

ஆனால் சினிமா விளம்பர நிகழ்ச்சிக்கு படத்தில் நடிக்கும் பிரபல நடிகர் நடிகைகள் வருவதில்லை என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களான ரஜினி, விஜய், சூர்யா ஆகியோர் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களிடம் பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

ஆனால் நடிகர் அஜீத்தோ இது போன்ற நிகழ்ச்சிக்கு தம்மை அழைக்க வேண்டாம் என்று கூறிவிடுவதால் அவருடைய படத்திற்கு இசைவெளியீட்டு விழா கடந்த 10 ஆண்டுகளாக நடைபெறவில்லை.

இதே போன்று லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகை நயன்தாராவும் பட புரோமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்பதை தவிர்த்து வருகிறார். ரஜினி நடித்த தர்பார், விஜய் நடித்த பிகில் உள்ளிட்ட படங்களின் இசை வெளியீட்டு விழாவில் நயன்தாரா பங்கேற்காததும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சென்னை சத்யம் திரையரங்கில் பரமபதம் விளையாட்டு படத்தின் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் படத்தின் நாயகியான திரிஷா கலந்துகொள்ளவில்லை. இதனால் நிகழ்ச்சிக்கு வந்த மற்ற பிரபலங்கள் திரிஷாவுக்கு கண்டனம் தெரிவித்தனர். நடிகை திரிஷா பட புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்றால் அவர் சம்பளத்தில் ஒரு பகுதியை திருப்பித்தர வேண்டியிருக்கும் என்று தயாரிப்பாளர் சிவா எச்சரிக்கை விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உச்ச நடிகர்கள் ரஜினி, விஜய் திரைப்பட விளம்பர நிகழ்ச்சிக்கு வரும் போது இவர்களுக்கு என்ன பிரச்சினை? என்று சாடினார்.

பட புரோமோஷனுக்கு வராத நடிகர், நடிகைகளை இனி படத்தில் நடிக்க வைக்க வேண்டாம் என்றும் இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் அவசர முடிவு எடுக்க வேண்டும் என்றும் சுரேஷ் காமாட்சி கேட்டுக்கொண்டார்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்