தமிழ் படம் 2.0 படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த போஸ்டர் சில தினங்களுக்கு முன்னர் வெளியான டிக்.டிக்.டிக். என்ற படத்தில் உள்ள காட்சிகளை கேலி செய்யும் வண்ணத்தில் அமைந்துள்ளது. சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தமிழ் படம் 2.0. இந்த படம் பிரபலமான தமிழ் படங்கள் மற்றும் அரசியல் தலைவர்களை கேலி செய்யும் வண்ணத்தில் நகைச்சுவையாக உருவாகி வருகிறது. இந்நிலையில் நேற்று வெளியான மற்றோரு போஸ்டரில் டிட்.டிக்.டிக். படத்தையும் இந்த படம் கேலி செய்துள்ளது.