தந்தையாக அல்ல.. நண்பனாக - ரன்பீர் கபூர் உருக்கம்
தனது மகள் குறித்து நடிகர் ரன்பீர் கபூரின் நெகிழ்ச்சியான பேச்சு இணையத்தில் பரவி வருகிறது. சமீபத்தில், ஆலியா பட் தனது கணவர் ரன்பீர் கபூர் ஒரு தந்தையாக தங்கள் குழந்தையை எப்படி பார்த்துக் கொள்கிறார் என்று பூரிப்புடன் பேசினார். இந்நிலையில் ரன்பீர் கபூர்,“எனது தந்தைக்கும், எனக்கும் இடையேயான உறவை நட்பு என்று கூட சொல்ல முடியாத அளவுக்கு தூரம். ஆனால், என் மகள் காலம் வித்தியாசமானது. நான் அந்த தடுப்பு சுவற்றை உடைத்து, எனது மகளுக்கு நண்பனாக இருக்க விரும்புகிறேன். அவளுக்கு சிறகுகளை கொடுத்து பறக்க வைப்பேன்“ என்று உருக்கமாக தெரிவித்தார்.