சினிமா

எப்படி இருக்கிறது “கோலமாவு கோகிலா”?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, ஜாக்குலின், சரண்யா பொன்வண்ணன், யோகிபாபு, அறந்தாங்கி நிஷா உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ளது கோலமாவு கோகிலா. நெல்சன் இயக்கத்தில் படத்தை லைகா புரடொக்சன்ஸ் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார்.

தந்தி டிவி

படத்தின் கதை என்ன?

ஒரு மசாஜ் சென்டரில் வேலை பார்க்கும் ஹீரோயின். கல்லூரிக்குச் செல்லும் தங்கை, வயதான பெற்றோர்கள். ஒரு நாள் ஹீரோயினுடைய தாயாருக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விடுகிறது. மருத்துவ செலவிற்கு 15 லட்சம் தேவைப்படுகிறது. ஹீரோயின் அந்த பணத்தை கட்டுவதற்காக பல முயற்சிகளை செய்கிறாள். அப்படி முயற்சி செய்யும்போது எதிர்பாராத விதமாக ஒரு போதைபொருள் கும்பலிடம் மாட்டிக்கொள்கிறாள். வேறு எங்கும் பணம் கிடைக்காத நிலையில் அந்த போதைப்பொருள் கும்பலிடம் வேலை செய்கிறாள். அவர்களும் போலீஸ் தொல்லையிலிருந்து தப்பிக்க இவளை பயன்படுத்துகிறார்கள். பிறகு எப்படி அந்த கும்பலிடம் இருந்து ஹீரோயின் மற்றும் அவர் குடும்பத்தினர் தப்பிக்கிறார்கள்?என்பது தான் கதை. நடிகை நயன்தாரா சமீபகாலமாக கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அதேபோல் இந்த படத்திலும் கதை தேர்வு அபாரம். ஒரு அப்பாவித்தனமாக முகத்தை வைத்துக் கொண்டு தைரியமாக எல்லா விஷயத்தையும் ஹீரோயின் கதாபாத்திரத்தில் அசத்தியுள்ளார் நயன்தாரா. இந்த படத்தில் ஹீரோ என்று யாரும் கிடையாது. நகைச்சுவை நடிகர் யோகி பாபுவுக்கு கிட்டத்தட்ட ஹீரோவுக்கு நிகரான வெயிட்டேஜ் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் நயன்தாராவை ஒருதலையாக காதலிக்கிறார். 'எனக்கு கல்யாணம் வயசு தான் வந்துருச்சுடி லவ் பண்ணவா'

யோகி பாபுவின் இன்ட்ரோ பாடல். அதற்கு அவர் ஆடும் நடனத்திற்கு தியேட்டரில் விசில் பறக்கிறது. படம் முழுக்க அவரது நகைச்சுவை வசனங்கள் வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றன. இசை போதை தரும் அனிருத் பாடல்கள் அருமை. ரசிகர்களை கோகிலா ஏமாற்றவில்லை!

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்