பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் குறித்த ஆவண குறும்படத்தை இசையமைப்பாளர் ஜிப்ரான் உருவாக்கியுள்ளார். அதனை சென்னை அடுத்த சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அரங்கத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டார். பின்னர் பேசிய கமல்ஹாசன், பெண்களுக்கு தற்காப்புக் கலையை கற்று கொடுப்பதைவிட பயமில்லாமல் வாழும் சூழ்நிலையை அமைத்து தர வேண்டிய பொறுப்பு ஆண்களுக்கு இருக்கிறது என்றார். ஒரு பெண்ணை வற்புறுத்தி கை குலுக்கினாலே அது தவறு தான் என்றும் கமல்ஹாசன் குறிப்பிட்டார். Me too எப்போது சொன்னால் என்ன, நியாயமான குரல் அது, எழட்டும் அவரை விமர்சனம் செய்யாதீர் என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.