வலிமை திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஸ்டண்ட் காட்சி ஒன்றுக்கு அஜித் டூப் போடாமல் நடித்துள்ளார். பைக் ஸ்டண்டில் ஈடுபட்ட போது அஜித்திற்கு காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டதால் அஜித் குணமடைந்துள்ளார். படப்பிடிப்பில் காயம் ஏற்பட்டதை அறிந்த அவரது ரசிகர்கள் டிவிட்டரில் #GETWELLSOONAJITH என்ற ஹேஸ்டக் உருவாக்கி ட்ரெண்ட் செய்துவருகின்றனர்.