தற்போதைய செய்திகள்

ஆர்.எஸ்.பாரதி பேசிட்டு சென்ற போது "பாரத் மாதா கி ஜெய்" என கோஷம் - கார் கண்ணாடி உடைத்து திமுகவினர் தாக்குதல்

தந்தி டிவி

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில், திமுக பொதுக்கூட்ட மேடை அருகே நிகழ்ந்த தாக்குதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேறறு உரையாற்றி விட்டு, மேடையை விட்டு இறங்கிச் சென்ற போது, அவ்வழியாக காரில் வந்தவர்கள் "பாரத் மாதா கி ஜெய்" என கோஷமிட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த திமுகவினர், அந்த காரை வழிமறித்து தாக்கினர்.

போலீசார் தடுக்க முயன்றும், சுற்றி வளைத்து தாக்கியதில் கார் கண்ணாடி சேதமடைந்தது. ஒரு வழியாக போலீசார் அந்த காரை சம்பவ இடத்திலிருந்து அப்புறப்படுத்தினர். நெல்லை பாளையங்கோட்டையிலிருந்து குற்றாலம் சென்ற அவர்கள், கோஷமிட்டது தெரியவந்த நிலையில், அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Breaking | TN Govt | Dams | அணைகள் பாதுகாப்பு | அனுமதி அளித்த தமிழக அரசு

Breaking | CM Vijay | TVK | Sivakarthikeyan | CM விஜய்யுடன் நடிகர் சிவகார்த்திகேயன் திடீர் சந்திப்பு

Breaking | Harassment Case | கபடி பயிற்சியாளர் மீதான பாலியல் புகார் | கோர்ட் பரபரப்பு உத்தரவு

Breaking | Minister Nirmal Kumar | நாகர்கோவில் கைதி மரணம் | அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி

TN Police | TN Govt | Law And Order | சட்ட ஒழுங்கு நடவடிக்கை - ஒரு வாரத்தில் 822 பேர் கைது