தற்போதைய செய்திகள்

மென்மையான நடிப்பினால் முத்திரை பதித்த நடிகர் அரவிந்த்சாமி சாதித்தது என்ன?

தந்தி டிவி

மென்மையான நடிப்பினால் முத்திரை பதித்த நடிகர் அரவிந்த்சாமி பிறந்த தினம் இன்று

1967ல் திருச்சியில் பிறந்த அரவிந்த்சாமியின் தந்தை டெல்லி குமார் தொலைகாட்சி சீரியல்களில் குணச்சித்திர வேடங் களில் நடித்தவர். அரவிந்த்சாமியை அவரின் பெரியப்பா வி.டி.சாமி தத்தெடுத்து வளர்த்தார்.

சென்னை டான் பாஸ்கோ பள்ளி மற்றும் பி.எஸ் உயர்நிலை பள்ளிகளில் பயின்ற அரவிந்த்சாமி, பின்னர் லயோலா கல்லூரியில் வணிகவியலில் இளங்கலை பட்டம் பெற்றார். கல்லூரியில் படிக்கும் போதே விளம்பர படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

1991ல் மணிரத்தனத்தின் இயக்கத்தில் வெளியான தளபதி படத்தில்அறிமுகமானார்.

1992ல் வெளியான ரோஜா படத்தில் கதாநாயகனாக நடித்து, பெண்களின் மனதை கொள்ளை கொண்டார்.

பம்பாய் படத்தில் உருக்கமாக நடித்து, பெரும் பாராட்டுதல்களை பெற்றார்.

1997ல் மின்சார கனவு படத்தில் வித்தியாசமான ரோலில் நடித்து அசத்தினார்

புதையல் படத்தில் காமெடி ரோலில் கலக்கினார்.

இந்தி படங்களிலுல் நடித்த அரவிந்த்சாமி, பின்னர் ஆக்சன் மற்றும் வில்லன் ரோல்களிலும் நடிக்கத் தொடங்கினார்.

2021ல் ஓ.டி.டி தொடர் ஒன்றைய இயக்கிய அரவிந்த்சாமி, சொந்தமாக சாப்ட்வேர் கம்பெனி ஒன்றையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

நடிகர் அரவிந்த்சாமி பிறந்த தினம், 1967, ஜூன் 30.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்