தற்போதைய செய்திகள்

போலீசில் புகாரளித்தவர் கொலை - திமுக பெண் கவுன்சிலர் அதிரடி கைது

தந்தி டிவி

செங்கல்பட்டு மாவட்டத்தில் நில ஆக்கிரமிப்பு குறித்து போலீசில் புகாரளித்தவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், திமுக பெண் கவுன்சிலர் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்...திருக்கழுக்குன்றம், மசூதி தெருவில் வசித்து வந்தவர் சர்புதீன். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளி வாசலின் சுற்றுப்புற இடங்களை சிலர் ஆக்கிரமித்திருப்பதாக போலீசில் புகாரளித்துள்ளார். இதனால், சர்புதீனுக்கும், திருக்கழுக்குன்றம் 10 ஆவது வார்டின் திமுக பெண் கவுன்சிலரான தவுலத்பீவி மற்றும் அவரது மகனுடன் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வழக்கு தொடர்பாக காரில் சென்று கொண்டிருந்த சர்புதீனை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைத்து கொலையாளிகளை போலீசார் தேடி வந்த நிலையில், திமுக பெண் கவுன்சிலர் தவுலத்பீவி மற்றும் அவரது மகன் பாரூக் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்