தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் 2வது சுற்றுக்கு இந்திய வீரர் சரத் கமல் முன்னேறி உள்ளார். ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில் ஆஸ்திரிய வீரர் டேவிட் செர்டரோக்லுவை சரத் கமல் எதிர்கொண்டார். இதில்,11க்கு 8, 9க்கு 11, 11க்கு 9, 11க்கு 6, 11க்கு 6 என்ற செட் கணக்கில் சரத் கமல் வெற்றி பெற்றார். இதன்மூலம் 2வது சுற்றுக்கு சரத் கமல் தகுதி பெற்றார்.