ஜிஎஸ்டி மசோதாவிற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்தது தவறான முடிவு என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்...
இது குறித்து பேசிய அவர், மாநிலங்களுக்கு நன்மைபயக்கும் என நினைத்து ஜிஎஸ்டி மசோதாவிற்கு ஆதரவு தந்ததாகவும், ஆனால் மாநிலங்களின் ஜிஎஸ்டி பங்கை மத்திய அரசு பறித்து வருவதாகவும் குற்றம்சாட்டினார். பாஜக தலைமையிலான மத்திய அரசு 100 நாள் வேலைத் திட்டம், ஓபிசி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு நிதி வழங்குவதை நிறுத்தியுள்ளதாக கூறிய அவர், பாஜக பாரபட்சமாக நடந்து கொள்வதாக தெரிவித்தார்.