தற்போதைய செய்திகள்

கோயில்களில் இலவச திருமணம்... திட்ட செலவினத் தொகை உயர்வு - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

தந்தி டிவி
• இந்து சமய அறநிலையத் துறை மூலம் கோயில்களில் நடத்தப்படும் இலவச திருமணத்திற்கான திட்ட செலவினத்தொகை 20 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. • கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரின் போது இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பில் 283 ஏழை எளிய இணைகளுக்கு கோயில் மூலம் இலவச திருமணம் நடத்தி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. • இதன் மூலம் இந்த இலவச திருமணங்களை நடத்துவதற்கான திட்ட செலவினத் தொகை 20 ஆயிரம் ரூபாயில் இருந்து 50 ஆயிரமாக உயர்த்தி உத்தரவிடப்பட்டுள்ளது. • திருமாங்கல்யத்திற்கு 20 ஆயிரம் ரூபாயும், மணமகன் ஆடைக்கு ஆயிரம் ரூபாயும், மணமகள் ஆடை மற்றும் மொத்த உணவுக்கு தலா 2 ஆயிரம் ரூபாயும், மாலை, பீரோ, கட்டில் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய சீர் என மொத்தம் 50 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது... • கோயில்களில் இலவச திருமணம் நடத்தி வைப்பதற்கு உபயதாரர்கள் கிடைக்காத நிலையில், கோயில்கள் மூலமே திருமணம் நடத்தி வைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்