தற்போதைய செய்திகள்

கீழே கணவன்.. மாடியில் கள்ளக்காதலன்.. காலையில் ரத்த வெள்ளத்தில் மாமானார், மாமியார் - போலீசை அதிரவிட்ட Whatsapp மெசேஜ்

டெல்லியில், சொத்துக்காக வயதான தம்பதியை கொன்று, கள்ளக்காதலனுடன் தப்பியோட நினைத்த மருமகளை போலீசார் கைது செய்த நிலையில், இதன் பின்னணியை விவரிக்கிறது இந்த தொகுப்பு...

தந்தி டிவி

டெல்லியின் கோகல்புரி பகுதியை சேர்ந்த மோனிகா வெர்மா என்ற பெண்ணுக்கும், ரவி ரத்தன் என்பவருக்கும் திருமணமாகி, ஒரு ஆண் குழந்தை உள்ளது.

பேஸ்புக்கில் ஆர்வம் கொண்ட மோனிகாவிற்கு, அதன் மூலம் ஆஷிஷ் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளைடைவில் தகாத உறவாக மாறியுள்ளது.

மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவர் ரவி, ஒரு கட்டத்தில் மோனிகாவின் செல்போனை பரிசோதித்துள்ளார். அப்போது வாட்ஸ் அப் சாட்டில், ஆசிஷ் என்ற நபருடன் திருமணத்தை மீறிய உறவில் மனைவி இருப்பது, அவருக்கு அதிர்ச்சியை அளித்தது.

என்ன செய்வதென்றே தெரியாமல் புலம்பிய ரவி, தனது ஆதங்கத்தை தந்தை ராதே ஷியாம் மற்றும் தாய் வீணாவிடம் தெரிவித்துள்ளார்.

மகனின் வாழ்க்கை நாசமாகி விடக்கூடாது என்ற ஆதங்கத்தில், ரவியின் பெற்றோரும், மருமகளின் நடவடிக்கையை கவனிக்கத் தொடங்கியுள்ளனர். அதன் மூலம், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கவே, ஆத்திரத்தின் உச்சிக்கு சென்றுள்ளார் மோனிகா.

இந்த விவகாரத்துக்கு இடையே, சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஒன்றை விற்று, அதன் மூலம் வேறொரு வீட்டை வாங்க ரவியின் பெற்றோர் முடிவு செய்துள்ளனர். இதனை அறிந்த மருமகள் மோனிகா, சொத்து முழுவதையும் கைப்பற்ற தனது கள்ளக்காதலன் ஆசிஷ் உடன் சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளார்.

எப்படியாவது சொத்தை விற்று, அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு, கள்ளக்காதலனுடன் தப்பிச் செல்வதில் குறியாக இருந்து வந்துள்ளார். அதற்கு இடையூறாக இருக்கும் மாமியார், மாமனாரை கொல்ல முடிவும் செய்துள்ளார் மோனிகா.

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தனது கள்ளக்காதலன் ஆசிஷ் மற்றும் அவரது நண்பரை வீட்டிற்கு வரவழைத்துள்ளார் மோனிகா. கணவன் வேலைக்கு சென்றிருந்த நேரத்தில், மாமனார் மற்றும் மாமியாரும் கடைக்கு சென்றுள்ளனர். அப்போது பின்வாசல் வழியாக வந்த ஆசிஷ் மற்றும் அவரது நண்பரை, மேல்மாடியில் அமர வைத்துவிட்டு, கள்ளக்காதலனுடன் நெருக்கமாக இருந்துள்ளார்.

நள்ளிரவில், வீட்டில் அனைவரும் தூங்கியுள்ளனர். பொழுது விடிந்து பார்த்தபோது, ராதே ஷியாம் மற்றும் அவரது மனைவி வீணா இருவரும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மகன் ரவி, போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார், முதலில் கொள்ளைக் கும்பல் கொலை செய்திருக்கலாம் என சந்தேகித்தனர். ஆனால், மோனிகாவிடம் சந்தேகத்தின் பேரில் நடத்தப்பட்ட கிடுக்கிப்பிடி விசாரணையில், வெளிச்சம் உண்மைக்கு வந்தது.

அதனைத் தொடர்ந்து, மோனிகாவை கைது செய்த போலீசார், தலைமறைவாக கள்ளக்காதலன் ஆசிஷ் மற்றும் அவரது நண்பரை தேடி வருகின்றனர்.

சொத்துக்காக மாமனார் மற்றும் மாமியாரை மருமகளே திட்டம் தீட்டி கொடூரமாக கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chennai Girl Murder | நடுங்கவிட்ட சென்னை கோயம்பேடு இளம்பெண் கொலை - கைதான சுமனின் பகீர் வாக்குமூலம்

IPL Finals 2026 | GTvsRCB | RCBvsGT | கிளைமாக்ஸில் ஐபிஎல்.. நேருக்குநேர் குஜராத் - ஆர்சிபி

CM Vijay Visit | முதல்வரான பின் திருச்சி கிழக்கு வரும் CM விஜய் - ஸ்ட்ரிக்ட்டாக வெளியான அறிவிப்பு

Breaking | Nellai Incident | நெல்லை பயங்கரம் | காலையில் தெறித்த தோட்டா | மாலையிலும் தொடரும் அதிரடி

CM Vijay Trichy Visit | முதல்வர் திருச்சி பயணம் - ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்