நீலகிரியில் கோடை சீசனையொட்டி பாதுகாப்பு பணிக்கு வந்த போலீசாருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கறி விருந்து அளித்து பாராட்டு தெரிவித்தார். அங்கு, கடந்த 19ம் தேதி தொடங்கிய மலர்கண்காட்சி 23-ம் தேதி முடிவடைந்தது. இந்நிலையில், மலர்கண்காட்சியை ஒட்டி, பாதுகாப்பு பணிக்கு வந்த வெளிமாவட்ட மற்றும் நீலகிரி போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் கறி, விருந்து வழங்கி உபசரித்தார். இதனிடையே கறி விருந்துக்கு ஏற்பாடு செய்த மாவட்ட கண்காணிப்பாளருக்கு போலீசார் நன்றி தெரிவித்தனர்.