தற்போதைய செய்திகள்

திருமணத்துக்காக நீண்ட நாள் ஏக்கம்- மேட்ரிமோனியில் வந்த அழகான போட்டோ.

தந்தி டிவி

மேட்ரிமோனி மூலம் திருமண ஆசையை தூண்டி 9 லட்சம் ரூபாய் மோசடி செய்த ஆந்திரா பெண்ணை சென்னை இணையவழி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த அசோக் சைதன்யா என்பவர், சென்னை, ஆவடியில் தங்கி கால் சென்டரில் பணிபுரிந்து வந்துள்ளார். 33 வயதாகும் இவர், திருமணம் செய்து கொள்வதற்காக தனது சுயவிவரத்தை மேட்ரிமோனியில் பதிவேற்றம் செய்ததாக கூறப்படுகிறது. அதன் மூலம் ஆந்திராவை சேர்ந்த சந்தியா என்பவருடன் அசோக் சைதான்யாவுக்கு பழக்கம் ஏற்பட, சினிமா நடிகை ஒருவரின் புகைப்படத்தை அனுப்பி அசோக்குடன் சந்தியா பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதில், மயங்கி போன அசோக், சந்தியா கேட்கும் போதெல்லாம் பணத்தையும், பொருள்களையும் வாரி வழங்கி வந்ததாக தெரிகிறது. 9 லட்சம் ரூபாய் வரையிலான பணம், 65 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் போன்றவைகளை அசோக்கிடம் இருந்து பெற்ற சந்தியா, அவர் திருமணம் தொடர்பான பேச்சை எடுத்த போது நம்பரை பிளாக் செய்திருக்கிறார். இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அசோக், இணையவழி குற்றப்பிரிவு போலீசில் புகாரளித்த நிலையில், செல்போன் சிக்னல் மூலம் பெங்களூருவில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கியிருந்த சந்தியாவை கைது செய்தனர். அவரிடம் இருந்து கம்யூட்டர், 3 செல்போன், 6 சிம் கார்டுகளை பறிமுதல் செய்த போலீசார், அவரின் 8 மின்னஞ்சல் மற்றும் டெலிகிராம் பக்கத்தை முடக்கி சந்தியாவை சிறையில் அடைத்தனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"