Thanjavur | `அசுரன்' படத்தின் அதே காட்சி போல்.. "சாதி வார்த்தைகளால் திட்டி.." - முழு பின்னணி..
தஞ்சை அருகே கொல்லங்கரை கிராமத்தில் பாதை ஆக்கிரமிப்பு விவகாரத்தில் பள்ளி மாணவர்கள் சென்றபோது அவர்களை தடுத்து கட்டையால் தாக்க போவது போல் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனா நிலையில், தற்போது தஞ்சை மாவட்ட நிர்வாகம் சார்பில் மாணவர்கள் அந்த வழியாக பள்ளிக்கு செல்வதற்கு பாதுகாப்பு அளிப்பதாகவும், பொது பாதைக்கு வழி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களை பள்ளிக்கு வேனில் அழைத்து சென்றுள்ளனர் மேலும் பாதை தொடர்பாக உரிய ஆவணங்களை சம்பந்தப்பட்டவர்கள் வைத்துள்ளதாக கூறப்படுகிறது மேலும் ஏற்கனவே நீதிமன்ற வழக்கிலும் அவர்களுக்கு சாதகமாக தான் தீர்ப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.