Social Media | "விடவே விடாது" - இணையத்தால் சீரழியும் பிஞ்சுகளின் வாழ்க்கை.. பேரதிர்ச்சி சேதி

Update: 2026-01-24 13:09 GMT

Kids in Social Media | "விடவே விடாது" - இணையத்தால் சீரழியும் பிஞ்சுகளின் வாழ்க்கை.. வயதுக்கு மீறிய குழந்தைகளின் செயல்கள் - பெற்றோர்களுக்கு பேரதிர்ச்சி சேதி

ஆஸ்திரேலியாவைப் போல, நம் அன்டை மானிலமான ஆந்திராவுலயும், 16 வயதுக்கு கீழ இருக்கறவங்களுக்கு சமூக ஊடகங்களைத் தடை செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஆந்திர தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் நாரா லோகேஷ் கூறியிருக்கிறார். இன்னைக்கு இருக்கற டிஜிட்டல் யுகத்துல எல்லோர் கையிலயும் செல்ஃபோன் இருக்குது. குழந்தைகள் பலபேர் Parents ஓட செல்ஃபோன் பயன்படுத்துறது அதிகரிச்சிடுச்சி. ஃபேஸ்புக், இன்ஸ்டா மாதிரியான சோசியல் மீடியாவுல சின்ன பசங்க கூட அக்கவுண்ட் வச்சிருக்காங்க. இதன் மூலமா, பெரியவங்களுக்கே தெரியாத பல விஷயங்க கூட சிறுவர், சிறுமியருக்கு நல்லா தெரியுது. தினம் தினம் செய்திகள்ல பாக்றோம், இன்ஸ்டா மூலமாக பழகி சிறுமியை கர்ப்பமாக்கிய பள்ளி மாணவன்... ரீல்ஸ் மோகத்தில் ரயில்முன் நின்று டான்ஸ் ஆடிய வாலிபர் கைது.. இதுபோல, அடிக்கடி பல சம்பவங்கள் நடக்குது. மொத்தத்துல பதின்பருவ சிறுவர் சிறுமியர சோசியல் மீடியா சீரழிக்குது என்பது தொடர் குற்றச்சாட்டா இருக்குது.

Tags:    

மேலும் செய்திகள்