"சொன்னா கோபம் வரும்... திருமாவளவன் அவர்களே வேண்டாம்.." - ஈபிஎஸ் அதிரடி பேச்சு
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில், நான் மக்களை சந்திப்பது தவறான ஒன்றுபோல விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் கூறுவது சரியல்ல என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மன்னார்குடியில் சுற்றுபயணம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி பொதுமக்களிடம் பேசினார். அப்போது நான் மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்வதை, அடுத்தாண்டு தேர்வுக்கு தற்போதே படித்து வருவதாக திருமாவளவன் கூறியுள்ளார் என்றும், பிறகு பரிட்சை நடக்கும் அன்றேவா படித்து தேர்ச்சி பெற முடியும் என்றும் பேசினார். மேலும் திருமாவளவன் அவ்வாறு பேசுவது மாணவர்களை தவறான பாதையில் வழி நடத்தும் என்றும் கூறினார்.