கான்செர்ட்டில் `VIP-க்கள்' கள்ளக்காதல் அம்பலம் - திடீரென FOCUS திரும்பி `உல்லாசத்தை’ உலகுக்கே படம் போட்டு காட்டிய கேமரா
அமெரிக்காவில் Cold play இசை நிகழ்ச்சியில் சிக்கிய கள்ளக்காதல் ஜோடி
அமெரிக்காவில் நடந்த இசை நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெறுவதாக, ஆஸ்ட்ரோனமர் Astronomer தொழில்நுட்ப நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் பாஸ்டனில் Boston நடைபெற்ற கோல்ட் ப்ளே Cold play இசை நிகழ்ச்சியின்போது ஆஸ்ட்ரோனமர் Astronomer தொழில்நுட்ப நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ஆன்டி பைரன் Andy Byron மற்றும் மனித வளத்தலைவர் கிளிஸ்டின் கபோட்டுடன் Kristen Cabot நெருக்கமாக இருப்பது போன்ற காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து விசாரணையை தொடங்கியிருப்பதாக தெரிவித்துள்ள ஆஸ்ட்ரோனமர் நிறுவனம், சர்ச்சைக்குள்ளான இருவரும் விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.