Trump vs Modi | இந்தியா உண்மையை அம்பலப்படுத்தியும் அடங்காமல் ஆடும் டிரம்ப் - மீண்டும் அதிர்ச்சி
மீண்டும் இந்தியாவை சீண்டும் டிரம்ப்ரஷ்யாவிடமிருந்து இந்தியா இனி எண்ணெய் வாங்காது என, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இதன்மூலம் உக்ரைனுடனான போருக்கு இந்தியா மறைமுகமாக உதவுவதாக குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தப்போவதாக சில தினங்களுக்கு முன்பு டிரம்ப் கூறியது சலசலப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில், வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடனான சந்திப்புக்குப்பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த டிரம்ப், இந்தியா இனி ரஷ்ய எண்ணெயை வாங்கப் போவதில்லை என்று குறிப்பிட்டார். இந்தியா-பாகிஸ்தான் மோதல் உட்பட உலகளவில் இதுவரை எட்டு மோதல்களை தான் தீர்த்து வைத்துள்ளதாகவும், டிரம்ப் மீண்டும் கூறினார்.